2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமையும் வாக்காளர் அட்டை விநியோகம்

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன்  ஏ ஜயசேகர)

எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களுக்காக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வாக்காளர் அட்டை விநியோகம் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு பின்னரும் வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும் தகுதியான வாக்காளர்கள் தபாலதிபரிடம் தமது அடையாளத்தை நிரூபித்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமனசிறி தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X