2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உலகெங்கும் ஸ்திரநிலைக்கும் முன்னேற்றத்திற்கும் பயங்கரவாதம் அச்சுறுத்தல்: ஜனாதிபதி

Super User   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகெங்கும் ஸ்திர நிலைக்கும் முன்னேற்றத்திற்கும் பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் சபையில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக உறுதியான மற்றும் சமரசமில்லாத அணுகுமுறையை மேற்கொள்ளுமாறும் உலக நாடுகளை அவர் கோரினார்.

தனது நாட்டின் 25 வருடகாலமாக நிலவிய பயங்கரவாத அனுபவமானது இவ்விவகாரத்திறகு உறுதியான தீர்வுகாணப்பட வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

உலகெங்கும் அண்மைக்காலத்தில் நிலவிய உறுதியற்ற தரத்திலானதும் பாரபட்சமானதுமான அணுகுமுறைகளானது பயங்கரவாத சக்திகளுக்கு புத்துயிரை ஏற்படுத்தக்கூடியது என அவர் தெரிவித்தார்.

'பயங்கரவாதத்தின் அரசியல் நிழல்களை நிராகரிக்கக்கூடிய வெளிப்படையானதும் சீரானதுமான பதிலளிப்பு அவசியமாகவுள்ளது. பயங்கரவாதம் செல்வந்த நாடுகள் வறிய நாடுகள் அனைத்துக்குமே அச்சுறுத்தலாகவுள்ளது' என அவர் கூறினார்.

அதேவேளை இலங்கையில் யுத்தம் முடிந்ததையடுத்து, உள்ளூரில் இடம்பெயர்ந்த 95 சதவீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும்,  யுத்தத்தின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் பெரும் எண்ணிக்கையிலானவை அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் பேராளிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூகத்துடன் மீளிணைக்கப்பட்டதாகவும் வடமாகாணத்தில் தற்போது 22 சதவீத பொருளாதார வளர்ச்சி நிலவுவதாகவும் அவர் கூறினார். பொலிஸில் இணைக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். Pix By: Sudath Silva


  Comments - 0

 • yaro Saturday, 24 September 2011 06:08 PM

  உலகெங்கும் ஸ்திர நிலைக்கும் முன்னேற்றத்திற்கும் பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் சபையில் நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக கண்டறிந்து தெரிவித்துள்ளார்.

  இது வரையிலும் இப்படி ஒன்று உலகில் கண்டு பிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

  Reply : 0       0

  rozan Saturday, 24 September 2011 09:40 PM

  இவர் கிரீஸ் மனிதனை பற்றி பேசமாட்டார்..... ஏனெனில் அது பயங்கரவாதத்திற்கு உட்படாது. .............

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .