S.Renuka / 2026 ஜனவரி 06 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அதன்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகாரிகளில் பலர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பஹலகம பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரியஇந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, நேர்மையை நிலைநிறுத்தவும், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார், பொலிஸ் துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஏனைய பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை விட மிக அதிகம், அத்துடன், அவை பொது நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த அதிகாரங்களை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுவதுடன், படைக்குள் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை பெறவேண்டும்
மேலும், பொலிஸ் துறையில் தற்போது 31,000 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்குள் 40,000 ஆக உயரும் என்றும் கூறினார். இதை நிவர்த்தி செய்ய, இந்த ஆண்டு 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago