Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 25 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
அம்பாறையில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவை துப்பாக்கியால் சுட்ட பிரதம இன்ஸ்பெக்டர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அம்பாறை மஹாஓயா விசேட அதிரடிப்படைத் தளபதியான சிசிர குமாரவுக்கும் (45) மேற்படி பிரதம இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான வாக்குவாதமொன்றையடுத்து பிரதம இன்ஸ்பெக்டர் தனது கைத்துப்பாக்கியால் ஏ.எஸ்.பி. சிசிரகுமாரவை சுட்ட பின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது ஏ.எஸ்.பி. சிசிரகுமார உயிரிழந்தார்.
மேற்படி பிரதம இன்ஸ்பெக்டர் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக விசேட அதிரடிப்படைத் தளபதியான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.டபிள்யூ.எம்.சி. ரணவன தெரிவித்தார்.
hamaza Monday, 26 September 2011 06:16 PM
என்ன பைத்தியம் இது.....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
32 minute ago