2021 மே 08, சனிக்கிழமை

இரத்மலானை விமான நிலையத்திற்கு வெளிநாட்டு ஜெட் விமானங்கள்

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தீபா அதிகாரி)

இரத்மலானை விமான நிலையமானது, நகர விமான நிலையமாக மாற்றப்பட்டு வெளிநாட்டு தனியார் ஜெட் விமானங்களுக்கும் சிறிய வான்கலங்களுக்கும் சேவை வழங்கப்படும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகார சபைத் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்தின் மூலம் நாட்டிற்கு மேலதிக வருமானமும் அந்நிய செலாவணியும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் தனியார் ஜெட் விமானங்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் எனவே, இரத்மலானை விமான நிலையத்தை நகர விமான நிலையமாக மாற்றவதற்கான ஆரம்ப வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரத்தமலானை விமான நிலையம் இலங்கையின் முதலாவது சர்வதேச விமான நிலையமாகும். 1960கள் வரை அது சர்வதேச விமான நிலையமாக இயங்கியது. யுத்த காலத்தில் அவ்விமான நிலையம் விமானப்படைத் தளமாக பயன்படுத்தப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X