2021 மே 06, வியாழக்கிழமை

சிலர் வெளியேறினாலும் ஜே.வி.பி. மேலும் மேலும் பலமடைகிறது: லால்காந்த

Super User   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து (ஜே.வி.பி.) சில உறுப்பினர்கள் விலகியபோதிலும் அக்கட்சி மேலும் மேலும் பலமடைவதாக ஜே.வி.பியின் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரான லால் காந்த கூறியுள்ளார்.

சில பிரச்சினைகளால் அண்மையில் தலைப்புச் செய்திகளில் ஜே.வி.பி. இடம்பெற்றதை லால் காந்த ஒப்புககொண்டார். ஆனால், கூறப்படுவதைப் போல் கட்சிக்கு ஆபத்து எதுவுமில்லை என அவர் தெரிவித்தார்.

' விமல் வீரவன்ஸ, நந்தன குணதிலக்க போன்ற பிரசித்தி பெற்ற அங்கத்தவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியபோது ஜே.வி.பியின் எதிர்காலம் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர். கட்சியிலிருந்து விலகிய பலர் தமது சொந்த அரசியல் குழுக்களை உருவாக்கினர். அவற்றில் பல அழிந்துவிட்டன' என அவர் கூறினார்.

கட்சியின்  மோதல்கள் குறித்த பல வதந்திகள் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படுவதாகவும் லால்காந்த கூறினார்.

'ஜே.வி.பியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் நொறுங்கினால் அரசாங்கம் மகிழ்ச்சியடையும். ஆனல் அதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை. கட்சியைவிட்டு எவர் வெளியேறினாலும் நாம் நம்பும் விடயங்களுக்காக தொடர்ந்து போராடுவோம்' என அவர் தெரிவித்தார். Pix By: Pradeep Dilrukshana


  Comments - 0

  • neethan Thursday, 29 September 2011 04:29 PM

    ஜனநாயக வழியில் உங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடாத்துங்கள். எதிர்காலத்தில் கட்சியின் தலைவராக வர முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .