Super User / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.வி.பி. எதிர்காலத்தில் எந்த கட்சியுடனும் எந்த காரணத்திற்காகவும் கூட்டணியமைக்க மாட்டாது எனவும் கம்யூனிஸ கொள்கைகளின் அடிப்படையில் தனது அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
கூட்டணி அரசியலானது ஜே.வி.பியின் அரசியல் கலாசாரத்தை அழித்துவிட்டதாக அக்கட்சியின் மாற்றுக்கருத்துடைய குழுவினர் குற்றம் சுமத்தும் நிலையில் ஜே.வி.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை அமைப்பதில் ஜே.வி.பி. முன்னின்றது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அக்கட்சி ஆதரித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணியின் வெற்றிக்கிண்ண சின்னத்தில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை ஜே.வி.பி. ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இனிமேல் அரசியல் கூட்டணிகளை அமைப்பதில்லை என ஜே.வி.பி. ஒரு வருடத்திற்கு முன்னர் தீர்மானித்ததாக அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரட்னாயக்க டெய்லி மிரருக்கு அளித்த செவ்வியில் கூறினார்.
அதேவேளை கடந்த இரு முக்கிய தேர்தல்களில் ஜே.வி.பி. ஆதரித்த சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலம்குறித்து கேட்டபோது, அதை சரத் பொன்சேகாவே தீர்மானிக்க வேண்டும் என பிமல் ரட்னாயக்க கூறினார்.
அரசியல் காரணங்களுக்காக தனிநபரின் சிவில் உரிமைகளை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒருபகுதியாக சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் விடுதலைக்காகவும் அவரின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்தவும் ஜே.வி.பி. தொடர்ந்து போராடும் அதில் பிரச்சினை எதுவுமில்லை' என பிமல் ரட்னாயக்க கூறினார்.
ஜே.வி.பியின் மாநாட்டை கூட்டவேண்டும் என மாற்றுக்குழுவினர் கோருவது குறித்து கேட்டபோது அதை கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும் என அவர் பதிலளித்தார்.
'5 வருடங்களுக்கு ஒரு தடவை இம்மாநாடு கூட்டப்பட வேண்டும். ஆனால் விசேட அரசியல் சூழ்நிலைகளில் விசேட மாநாடுகளை கூட்டுவதற்கு இடமுள்ளது. இது குறித்து மத்திய குழு தீர்மானிக்கும்' என பிமல் ரட்னாயக்க கூறினார்.
8 hours ago
23 Nov 2025
23 Nov 2025
meenavan Thursday, 29 September 2011 04:11 PM
விகிதாசார தேர்தல் முறை அமுலில் உள்ளவரை உங்கள் கூற்று சரிவரும். அதன் பின்னர் உங்கள் நிலைமை மாரி காலத்தில் சத்தமிடும் தவளையின் கதிதான். கம்யுனிசம் கல்லறையை அடைந்துள்ள நிலைமையில் அக்கொள்கையை சிரமேற்கொண்டுள்ள நீங்களும் மாற்று பாதையை தேடவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
23 Nov 2025
23 Nov 2025