2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உலகத்துக்கு இலங்கை முன்னுதாரணமாக விளங்குகிறது: ஜனாதிபதி

Super User   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ ஜயசேகர)

இருபது மாதங்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 10,000 பேருக்கு தான் புனர்வாழ்வுடன் திறன் அபிவிருத்தி பயிற்சியளித்தன்மூலமாக புனர்வாழ்வளித்தல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு என்பனவற்றில் இலங்கை உலகத்துக்கு முன்னுதாரணமாக  விளங்குகிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 1800 முன்னாள் உறுப்பினர்களை சமூகத்துடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக அலரி மாளிகையில் இன்று நடந்த நிகழ்வில் பேசும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

வேறு நாடுகளில் புனர்வாழ்வுத்திட்டங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்ததாகவும் அவர் கூறினார்.

'எமது புனர்வாழ்வு திட்டத்தை பல உள்ளூர் குழுக்களும் சர்வதேச குழுக்களும் மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த திட்டத்தை ஆதரிப்பதற்காக அவர்கள் இதை செய்யவில்லை. இதில் எங்கே பிழை காரணலாம் அதை வைத்துக்கொண்டு இதை எவ்வாறு குழப்பலாம் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இன்று தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்ட 1800 இளைஞர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிலைக்கு நாம் வந்துள்ளோம். இது பெரும் ஆறுதல் தரும் விடயம் என ஜனாதிபதி கூறினார்.

'நீங்கள் உங்கள் கிராமம் முற்றுமுழுதாக மாறியிருப்பதை காண்பீர்கள். மூன்று நான்கு வருடங்களுககு முன்னர் உங்கள் பெற்றோரின் எதிர்ப்பையியும் மீறி எல்.ரி.ரி.ஈயினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அப்போது இருந்த நிலைமையிலிருந்து வேறுபடும் சூழநிலை நீங்கள் அங்கு காண்பீர்கள். உங்கள் நகரம் அல்லது கிராமம் அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி திட்டத்தில் இணைந்துள்ளது. காபற் வதி மின் கம்பிகள், வங்கிகள், தொழிற்சாலைகள் அங்கு இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த அபிவிருத்தியில் நீங்களும் பங்குதாரர் ஆகுங்கள். வாழ்வில் வெற்றி பெறுங்கள்' என அவர் இளைஞர்களிடம் கூறினார்.
 


  Comments - 0

 • asker Saturday, 01 October 2011 05:52 PM

  மஹிந்த மஹிந்த தான் , இவரை போன்று ஒரு ஜனாதிபதி கிடைத்ததற்கு நாம் பெருமை பட வேண்டும்.

  Reply : 0       0

  nakkiran Sunday, 02 October 2011 01:56 AM

  இதை செய்வதற்கு முக்கியகாரணம். CH-4 AND UN ரிப்போட்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .