2021 மே 08, சனிக்கிழமை

'அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது'

Super User   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

அரசாங்க மருத்துவர்கள் பலர் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் நிலையில்,  அரசாங்க மருத்துவ கல்லூரி விரிவுரையாளர்கள் தனியார் நிறுவனங்களில் கற்பிக்கக்கூடாது என்று தெரிப்பதன் மூலம் தனியார் மருத்துக் கல்லூரி விடயத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியான, தெற்காசிய தொழில்நட்ப மற்றும் மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது. 

 மாலபே  கனளக ளனகமருத்துவ கல்லூரிக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நியாயமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் பொதுமக்களுக்கு தவறான தகவல்களை  வழங்குவதாகவும் அக்கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் சமீர சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழு தனது விசாரணையை பூர்த்தியாக்கும் வரை இம்மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை சேர்ப்பதை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் உண்மையில் அப்படி இக்கல்லூரி கோரப்படவில்லை எனவும் டாக்டர் சமீர சேனாரட்ன கூறினார்.
 


  Comments - 0

  • manithan Saturday, 01 October 2011 10:49 AM

    இதுதான் உண்மை. அரசாங்க மருத்துவக் கல்லூரிகளிற் கற்பிக்கும் அதே விரிவுரையாளர்களும் பேராசிரியர்களுமே இங்கும் கற்பிக்கின்றனர். அரசாங்கம் ஏனைய மருத்துவக் கல்லூரிகளைப் போன்றே இதனையும் கண்காணிக்கிறது. இந்நிலையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை வைப்பது அநீதியான செயலாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X