2021 மே 06, வியாழக்கிழமை

த.தே.கூட்டமைப்பு - அரசு தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்குமிடையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்...

எதிர்வரும் 8ஆம் திகதி சில உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அரச தரப்பினர் இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையினால் எங்களுடனான பேச்சு - தேர்தல் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் தேர்தலில் மும்முரமான போட்டியில் இறங்காத போதிலும் அரசு தரப்பினர் கடுமையான பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையினால் தேர்தல் முடியும்வரை எமது பேச்சு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த பேச்சு எப்பொழுது நடைபெறும் என திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் எதிர்வரும் 10ஆம் திகதியளவில் பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அரசு தரப்பினர் வரவு - செலவு திட்டத்தினை சமர்ப்பிப்பதில் நேரத்தினை செலவிடவுள்ளனர். ஆகையினால் அதற்கு முன்னர் நிச்சயமாக எமக்கிடையிலான பேச்சு தொடரும் எனவும் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0

  • neethan Monday, 03 October 2011 02:00 PM

    புரையோடிப்போயுள்ள சிறுபான்மையினரின் பிரச்சினையை விட, ,எஞ்சியுள்ள உள்ளுராய்ச்சி மன்ற தேர்தல் அரசுக்கு முக்கியமாக உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .