Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்டு, அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பட்டிருக்கும் மூன்று ஒழுங்குப் பிரமாணங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான மாவை சேனாதிராஜா தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் பிரகடனப்படுத்;தப்பட்டிருக்கும் ஒழுங்குப்பிரமாணங்களான 'பிரயோகத்தை நீடித்தல்', 'தடு;ப்புக்காவல் கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள்' 'சரண் அடைந்தோர் பராமரிப்பு மற்றம் புனர்வாழ்வு' தொடர்பான ஒழுங்குப்பிரமாணங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
அடிப்படை உரிமைமீறல் மனுவில் சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, பொலீஸ் மாஅதிபர் ஆகியோரும் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளும் பிரதிவாதிகளாகப் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தன்முன்னால் ஆஜர்செய்யப்படும் தடுப்புக்காவல் கைதிகள் தொடர்பாக அவர்களை விடுதலை செய்வதற்தான உத்தரவுகளைப் பிறப்பிப்பிக்கும்; நீதவானின் தற்துணிபு அதிகாரத்தை இந்த ஒழுங்குப்பிரமாணங்கள் நீக்கமுயல்கின்றன என்று மனுதாரர் தெரிவித்திருக்கிறார்.
நபர் ஒருவர் ஏதாவது சட்டவிரோத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற நியாயமான நம்பிக்கையின் அடிப்படையின் மட்டுமே பாதுகாப்பு அமைச்சர் - பாதுகாப்புச் செயலாளர் அல்ல - அதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாக நாடாளுமன்றம் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் ஏற்பாட்டை செய்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்கள் தொடர்பாக அவர் மேற்கொள்ளும் எந்தவொரு விதியும் அவரது அதிகார வரம்புக்குப் புறம்பானது என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுங்குப்பிரமாணங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளான சித்திரவதையிலிருந்து சுதந்திரம், சம உரிமை மற்றும் சட்டப்பாதுகாப்பு உரிமை, தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைப்பிலிருந்து சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் மற்றும் சட்டபூர்வ தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமைகளை அமைச்சர் மீறுகிறார் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
45 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago