Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரதேசவாசியொருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டிகாவத்தை, கொரட்டுவ வீதிக்கு முச்சக்கர வண்டியொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே மேற்படி பிரதேசவாசி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
52 minute ago