Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் தொடர்புபட்ட குழுவினர்களுக்கிடையில் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது நபரும் இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
இராகம, மத்துமகல பகுதியைச் சேர்ந்த மணிமேல் குமாரசுவாமி என இன்று உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. கொலன்னாவைப் பகுதியில் இன்னமும் பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மரணச்சடங்கு நாளைமறுதினம் புதன்கிழமை கொலன்னாவையிலுள்ள உமகிலிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கொலன்னாவையைச் சேர்ந்தவர்களான தம்மிக்க ஜயசேகர (வயது 45), முகமட் அஸீம் (வயது 32) ஆகியோரும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்களென அடையாளம் காணப்பட்டனர்.
அமைச்சு பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு விரைந்த அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. (Supun Dias)
5 minute ago
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
23 minute ago