2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

நீதிமன்றில் ஆஜராகத் தவறிய ஏ.எஸ்.பி. பிணையில் விடுதலை

Super User   / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

சாட்சியத்தின் ஏற்புடைமை பற்றிய வழக்கொன்றில் பிரதம சாட்சியான பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி), நீதிமன்ற விசாரணையின்போது ஆஜராகத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு வரத்த வறிய உதவி பொலிஸ் அத்தியட்சகரை நீதிபதி சுனில் ராஜபக்ஷ ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

எல்.ரி.ரி.ஈ.யுடன் தொடர்பிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட தியாகராஜா மோகன் ரூபன், பயங்கரவாத புலனாய்வு  பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் சுய விருப்பின் பேரில் வழங்கப்பட்டதா அல்லது நிர்ப்பந்தத்தின்பேரில் வழங்கப்பட்தா என தீர்மானிப்பதற்கான விசாரணைக்கு வரவில்லை என்பதே மேற்படி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மீதான குற்றச்சாட்டாகும்.

இவ்வழக்கு செப்டெம்பர் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மேற்படி உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றுக்கு வந்திருந்தார். அப்போது அவர் 7 ஆம் திகதி விசாரணைக்கு வரத்தவறியமை கவனத்திற்கொள்ளப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.  அடுத்த விசாரணை நவம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X