2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

'நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் வரை பகிரங்கமாகாது'

Super User   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கையளிக்கப்படும் என ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் முறையாக வெளியிடப்படும் வரை அதன் எந்தவொரு பகுதியும் வெளியில் வராது என ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிட்ட பின்னரே இலங்கைக்கு எதிரான யுத்த குற்றம் பற்றிய குற்றச்சாட்டுகளை ஆராயவுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது.

அதே சமயம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தில் ஆராய்வதற்கு சமூகம் அழுத்தம் பிரயோகித்து வருகின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு 2011 ஆகஸ்ட் 11ஆம் திகதி தொடங்கி 2011 பெப்ரவரி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • ruban Tuesday, 18 October 2011 04:02 AM

    எல்லாம் ஒரு கண்துடைப்பு இப்படி எத்தனை ஆணைக்குழுவை பார்த்திட்டம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--