2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

துமிந்த சில்வா எம்.பி நரம்பியல் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நரம்பியல் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இன்று காலை மாற்றப்பட்டுள்ளார் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிப்பாளர் டாக்டர்.எஸ்.ஏ.கே.கமகே தெரிவித்தார்.

 

 

வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வரும் துமிந்த சில்வாவுக்கு திரவ உணவுகளே வழங்கப்பட்டு வருவதாகவும் அவரை அடிக்கடி சுய நினைவுக்கு அழைத்து வருவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

துமிந்த சில்வாவுக்கு மற்றுமொரு சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டுள்ள போதிலும் அது விரைவில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் கமகே மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--