Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் குடும்பத்தினர் அவரது கொலை தொடர்பான விசாரணையில் துமிந்த சில்வாவை பிரதான சந்தேக நபராக கொள்ளாதையிட்டு கேள்வியெழுப்பியுள்ளதுடன், இதுவரை நடந்த விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
பிரேமச்சந்திராவின் சகோதரர் அசேல ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில்,
தனது சகோதரரின் கொலை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். எனது சகோதரரை துமிந்த சில்வா சுட்டதைக் கண்டதாக ஒருவர் சாட்சியமளித்துள்ளார். அப்படியிருக்கும்போது துமிந்த சில்வா ஒரு சந்தேக நபரல்லவென அவர்கள் எப்படி கூறமுடியுமெனவும் அவர் கூறினார்.
விசாரணை பற்றி பல முரண்பாடான அறிக்கைகள் வருகின்றன. இந்த துயர சம்பவம் குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எமக்கு ஏமாற்றமளிப்பவையாகவுள்ளன. கொலை நடந்த பின் ஜனாதிபதி எமது குடும்பத்தவருடன் பேசவில்லை. கொலன்னாவை மரண வீட்டுக்கு அவர் வரவுமில்லை.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் உயிருக்கு ஆபத்திருப்பதாக நாம் இவ்வருடம் பெப்ரவரி மாதம் அறிந்து அவருக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வரையிலான பல அதிகாரிகளை கேட்டோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லை என்றார்.
துமிந்த சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஏன் பயப்படுகின்றனர்? எமது சகோதரரை சுட்ட அந்த மனிதன் வைத்தியசாலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றான் என பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் சகோதரி சுவர்ணா குணரட்ன குற்றஞ்சாட்டினார்.
துமிந்த சில்வா கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராயின் அவரை ஏன் தூரத்திலிருந்த ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு கொண்டுபோக வேண்டும். சம்பவம் நடந்த இரண்டு மணித்தியாலத்திற்குள் இரண்டு சந்தேக நபர்கள் இந்தியா போக விஸா பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதெனவும் அவர் கூறினார்.
துமிந்த சில்வா மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் அவர் திண்ம உணவு உட்கொண்டது எவ்வாறென சுவர்ணா குணரட்ன கேட்டார்.
மரணத்தின் வாசல் வரை போன துமிந்த சில்வா அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்தார் என்பதை நாம் நம்பவில்லையெனவும் அவர் கூறினார். ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் முகாமைத்துவ சபை ஏன் கலைக்கப்பட்டதென அவர் கேள்வியெழுப்பினார்.
கனேடிய பிரஜையான தான் கனடாவிலிருந்து வரும்வரை தனது சகோதரரின் மரணம் தொடர்பில் விசாரணை தொடங்கவில்லையென கூறிய அவர், அரசியல்வாதிகள் சட்டத்தை கையிலெடுத்து தாம் விரும்பியவாறு செயற்படுவதற்கு இது நல்ல உதாரணமாகுமெனவும் அவர் கூறினார்.
sakeena Wednesday, 19 October 2011 08:51 PM
நடுத் ஹாமுதுருவங்கே படுத் ஹாமுதுருவங்கே..... குடும்பத்தார் என்னதான் மன்றாடினாலும் ஒன்னும் ஆகப்போவதில்லை...
Reply : 0 0
xlntgson Thursday, 20 October 2011 09:20 PM
இடதுசாரி அரசியலுக்கு கஷ்டகாலம், அதுவும் புரட்சி வேண்டாம் என்று கைவிட்ட அரசியல்வாதிகளுக்கு, அவர்களது பழைய வரலாறு கிண்டப்படுகிறது! 'பாரத' இறந்தபின் மக்கள் செல்வாக்கு அடைவது விநோதமும் விதியின் விளையாட்டும்! இடதுசாரிகள் விதியை நம்புவார்களோ இல்லையோ, நியதி அதுவே! உயிரோடு இருந்த பாரதவை விட இறந்த பாரத அவர்களது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். உலகில் வாழ்கிற காலம் வரை எல்லாக் கூத்தும் யார்தான் நூறு வயது வரை ஒரே புகழில் வாழ்ந்தது முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவரும் இல்லை சரித்திரம் திரும்பும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025