Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரணில் போன்ற திறமையான அரசியல்வாதி வீதிக்கு இறங்கி பொதுமக்கள் மத்தியில் பிரசாரங்களில் ஈடுபட்டதால் இம்முறை கொழும்பு மாநகரசபைத் தேர்தலின் போது அரசாங்கம் தோல்வியுற்றது என்று ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது, 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே களமிறங்கி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியுற்றமைக்கு காரணம் என்ன?' என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மேற்கண்டவாறு கிண்டலாக பதிலளித்தார்.
'முச்சக்கர வண்டியில் தோட்டங்களுக்குச் சென்றும் வீதியோரக் கடைகளிலும் நின்று பிரசாரங்களில் ஈடுபட்டதனால் ஐக்கிய தேசிய கட்சி, கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்றது' எனவும் கூறினார்.
9 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago