2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பறிமுதல் சட்டம் குறித்து பிரித்தானிய பிரதமர் கவலை: ரணில்

Super User   / 2011 நவம்பர் 17 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா, தீபா குமாரி)

அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட செயற்பாடு குறைந்த நிறுவனங்கள் மற்றும் பயன்பாடு குறைவாகவுள்ள சொத்துக்களுக்கு புத்துயிரளித்தல் சட்டமூலம் தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் மற்றும் பொதுநலவாய தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் எதிர்க்க்கட்சியினருக்கு ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாக  சர்வதேச ஜனநாயக ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஆகியன உறுதியளித்துள்ளதாக இன்று நாடுதிரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

1977 இற்கு முந்தைய அரசாங்கம், இலங்கை வர்த்தகர்களின் சொத்துக்களை தேசிய மயப்படுத்தியிருக்காவிட்டால் அவர்கள் உலகில் முன்னணி தொழிலதிபர்களாகிருப்பர் எனவும் ரணில் கூறினர்.

எனவே தயா கமகே, ஹரி ஜயவர்தன உட்பட உள்ளூர் வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாப்பது அவசியம் என ரணில் வி;க்கிரமசிங்க கூறினார். (Pic by Pradeep K. Pathirana )

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .