2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நிர்வாணப் படங்களை வெளியிடபோவதாக அச்சுறுத்தி பாலியல் உறவுக்கு நிர்பந்திக்கப்படுவதாக ஆசிரியை புகார்

Super User   / 2011 நவம்பர் 17 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (லக்மால் சூரியகொட)

பேஸ்புக் இணையத்தளம் மூலம் தனது நண்பராக அறிமுகமான ஒருவர், தன்னுடன் பாலியல் உறவுகொள்ளவேண்டுமென நிர்பந்தித்து அச்சுறுத்தியதாக ஆசிரியை ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்துள்ளார்.

தனது நிர்வாணப் புகைப்படங்களை பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிடப் போவதாகக்கூறி அந்நபர் அச்சுறுத்தியதாகவும் அகலவத்தையைச் சேர்ந்த இந்த ஆசிரியை  முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றும் மேற்படி நபர் இவ்வருடம் செப்டெம்பர் 15 ஆம் திகதி பேஸ் மூலம் தன்னுடன் நட்பானதாக ஆசிரியை தெரிவித்துள்ளார். பின்னர் இந்நட்பு காதலாக மாறியதாகவும் இருவரும் செல்லிடத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் 17 ஆம் திகதி இருவரும் பம்பலப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் சந்தித்ததாகவும் அங்கு சந்தேக நபர் தனது நிர்வாண புகைப்படங்களை பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தேக நபரின் கோரிக்கையின் பேரில் தான் இப்புகைப்படங்களை பிடிப்பதற்கு இணங்கியதாகவும் அவர் தன்னை திருமணம் செய்வதாகவும் வாக்குறுதியளித்தாகவும் பொலிஸாரிடம் ஆசிரியை தெரிவித்துள்ளார். சந்தேக நபருக்கு தான் 11,000 ரூபா பணம் கொடுத்தாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்பின் சந்தேக நபரினால் தான் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நிர்வாணப் புகைப்படங்களை பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தி பாலியல் உறவுகொள்ள நிர்பந்தித்தாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடர முடியும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ; தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக அவரின் இரு தொலைபேசி இலக்கங்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமொன்றுக்கு நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார்.


  Comments - 0

 • pasha Thursday, 17 November 2011 10:09 PM

  it is very difficult to understand how did this teacher allowed to take nude fotos after they met first time? this facebook is making lot of problems it is time to ban this in sri lanka.

  Reply : 0       0

  Dilan Thursday, 17 November 2011 10:10 PM

  நல்ல படிப்பிணை

  Reply : 0       0

  Mohammed Hiraz Thursday, 17 November 2011 10:34 PM

  பேஸ்புக் ஏன் செக்ஸ் புக்காகிறது சிலருக்கு??? தெரியாத எவனுடனும் நட்பாக இருப்பதை பேஸ்புக் யூஸ் பண்ணும் மகளிர் கண்டிப்பாக தவிர்ப்பதே எல்லாவற்றுக்கும் நலமாகும்.

  Reply : 0       0

  Ramesh Thursday, 17 November 2011 10:56 PM

  கடவுளே கடவுளே

  Reply : 0       0

  rohan thamapapillaia Friday, 18 November 2011 12:00 AM

  வாட் எ disgrace

  Reply : 0       0

  niros Friday, 18 November 2011 04:53 AM

  காதலுனுக்கோ இல்லை கணவனுக்கோ இந்த மாதிரி நிர்வாண புகைபடங்கள் எடுப்பதில் என்ன திருப்தியோ தெரியவில்லை. இந்த விதமான விபரீத ஆசைகளுக்கு முக்கியமாக பெண்கள் இடமளிக்க கூடாது. செய்வதெல்லாம் செய்து விட்டு, அதன் பின் சும்மா வருத்தப்பட்டு பயனில்லை.

  Reply : 0       0

  xlntgson Friday, 18 November 2011 12:55 PM

  KADHAL PADUTTHUM PAADU!

  Reply : 0       0

  fazal Friday, 18 November 2011 01:32 PM

  இது போன்ற misuse கள் facebook போன்ற சமூக வலையமைப்புகள் இலங்கையில் தடை செய்ய ஏதுவான காரணங்கள் ஆகலாம்.

  Reply : 0       0

  osthimamu Friday, 18 November 2011 03:28 PM

  facebook is comericial website.
  muthal santhipilaye niruvanamaka photo eduppatharkku anumathithu viddu viddu piraku ippadi kathai kurinaal?????

  Reply : 0       0

  rajab Friday, 18 November 2011 05:13 PM

  என்ன கொடும சரவணன் இது

  Reply : 0       0

  Muna Friday, 18 November 2011 05:54 PM

  பாலியல் உறவு இல்லாமல்தான் நிர்வாணப் புகைப்படத்துக்கு இடம் கொடுத்தார் போல! நல்ல டீச்சர்.

  Reply : 0       0

  saaththan Friday, 18 November 2011 06:33 PM

  @ Pasha , Identify the friend whether you know or not before accepting friend request,then there will be no any barrier using facebook. in here all are wrong from the beginning (friendship between teacher and the unidentified person)how was she able to stand nude infront of that person? you cant blame facebook.User should have been careful.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .