Kogilavani / 2011 நவம்பர் 18 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேச்சுவார்த்தையில் அரசின் உண்மை நிலைப்பாட்டை அரசின் பங்களிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய காட்டி கொடுத்துள்ளதா? எனும் கேள்வி கண்டிப்பாக எழுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளரும் மேல் மாகாண உறுப்பினருமான கலாநிதி என் குமரகுருபரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கண்ணாம்மூச்சி காட்டுவதற்கே அதிகாரப் பகிர்வு குறித்து பேச தயார் என்று அரசு கூட்டமைப்பினரிடம் கூறியிருக்கிறது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் கூறியிருக்கிறார். போர் இடம்பெற்ற காலத்திலும்கூட அதிகாரப் பரவலாக்கலுக்கு இடமளிக்காத அரசு, எதிர்காலத்திலும் அதற்குச் சம்மதிக்காது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கிறார்.
தமிழ் மக்கள், தமிழ் தலைமை, உலகம் முழுதும் பேச்சுவார்த்தையை நம்பியிருக்க் ஜாதிக ஹெல உறுமய இதுதான் உண்மை நிலைவரம் என பெரும் குண்டை போட்டிருப்பது அரசாங்கம் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகும். அரசாங்கம் கூட்டமைப்புக்குக் கண்ணாம்மூச்சி காட்டுகிறதா?
எனவே இந்த சூழ்ச்சி பற்றி தமிழ் மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் அல்லது ஹெல உறுமயவின் சூழ்ச்சியா? என அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைபிற்கும் தெளிவுபடுத்தியாக வேண்டும் என கலாநிதி குமரகுருபரன் கூறியுள்ளார்.
49 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
6 hours ago
22 Dec 2025