2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் யானைகளுக்கு ஓட்டப்போட்டி

Super User   / 2011 நவம்பர் 18 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(தாரக பஸ்நாயக்க)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் யானையோட்டப் போட்டிகளைக் காணும் அரிய வாய்ப்பு இன்றும் நாளையும் மக்களுக்கு கிடைக்கும்.

மணித்தியாலத்திற்கு 80-100 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இவ்வீதி எதிர்வரும் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வாக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யானையோட்டம், கிரிக்கெட், கரப்பந்தாட்டம், சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இடைமாற்ற நிலையங்களுக்கிடையில் நடைபெறவுள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தாலவல தெரிவித்தார்.

கொட்டாவ, கஹாதுடுவ, களனிகம, தொடங்கொட, வெலிபன, குருந்துகஹதெக்கம, பத்தேகம, பின்னதுவ முதலான இடங்களில் இந்த இடைமாற்ற நிலையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானையோட்டப் போட்டி பண்டாரகமவிலும் மரதன் ஓட்டப் போட்டி கஹாதுடுவையிலும் ஆரம்பமாகவுள்ளன.
மேற்படி பிரதேசங்களைச் சூழவுள்ள உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்தோருக்கிடையில் தலா 6 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட்  போட்டி நடைபெறவுள்ளது. எனினும் விரும்பிய எவரும் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றலாம் என  பிரதியமைச்சர் கொத்தலாவல கூறினார்.

இன்று காலை 8.30 மணிக்கு கொட்டாவையில் பிரித் ஓதல் வைபவம் இடம்பெறும்.

இரு நாட்களிலும் போட்டிகளின்முடிவில் கண்கவர் வானவேடிக்கைக்கைகள் இடம்பெறவுள்ளன.  சிறுவர்களுக்கான ஓவியப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.


 


  Comments - 0

  • fazal Saturday, 19 November 2011 02:23 PM

    thetku veediyil entha yaanai vellum?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X