2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் வரவு-செலவுத்திட்ட உரையின் போது ஐ.தே.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சற்று முன்னர் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்டம் தொடர்பான வாசிப்பு தொடர்கின்றது.

2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் உள்ளடக்கங்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மன்றில் கூச்சலிட்டனர்.

இதன்போது, அவர்களைத் தடுப்பதற்காக ஆளும்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று பதிலடி கொடுக்க முயற்சித்த போதிலும் ஜனாதிபதி அவர்களை கட்டுப்படுத்தி தனது உரையைத் தொடர்ந்தார்.

அத்துடன், ஆளும்கட்சியின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சியொன்று இவ்வாறாக கூச்சலிடுவதை வரவேற்பதாகவும் ஆனால் அந்த எதிர்க்கட்சி பலம் மிக்கதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மன்றில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மன்றிலிருந்த ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.


  Comments - 0

  • angaady Monday, 21 November 2011 08:34 PM

    ஐ.தே.க என்ன செய்வதென்று தெரியாமல் வெளிகிட்டாங்க போல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .