2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு முடிவு

Super User   / 2011 நவம்பர் 21 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

தபால்மா அதிபர் எம்.கே.பீ. திசாநாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதாக தபால் தொலைதொடர்புகள் அமைச்சு உறுதியளித்ததையடுத்து, தாம் ஒருவாரகாலமாக மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முடிவுக்குகொண்டுவந்துள்ளதாக தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று தெரிவித்தனர்.

இவ்வேலை நிறுத்தம் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான தபால்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கியிருந்தமை குறிப்பித்தக்கது.

தபால்மா அதிபர் எம்.கே.பீ. திசாநாயக்க மீது ஊழல் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி, அவரை பதவி நீக்கவேண்டுமெனக் கோரி தபால் ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.

இதுதொடர்பாக தபால் திணைக்கள தொழிற்சங்கத்தலைவர்களுடன் கலந்துரையாடிய, தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, தபால்மா அதிபர் குற்றவாளியாக காணப்ட்டால் அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என உறுதியளித்துள்ளார்.

'அரசாங்க ஊழியர் ஒருவரை நாம் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  மாத்திரம் நீக்கமுடியாது. தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு தபால் மா அதிபருக்கும் நாம் வாய்ப்பு வழங்குவோம். இவ்விடயம் அமைச்சரவை மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிணங்க நாம் தீர்மானமொன்றை மேற்கொள்வோம்' என அமைச்சர் ஜீவன் குமாரங்க கூறினார்.


 


  Comments - 0

  • Abu hamadi Tuesday, 22 November 2011 01:30 AM

    இன்னும் எத்தனையோ கிராமங்களிலில் தபால் நிலையங்களை வீடுகளாகவும் கடைகளாகவும் பாவிக்கிறார்கள் அவர்களையும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .