2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல, சாதாரண மக்களை அரசு மறந்துவிட்டது: ஐ.தே.க.

Super User   / 2011 நவம்பர் 22 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10 சதவீத சம்பள உயர் வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் போதுமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சி இன்று தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற,  வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, "அரசாங்கத்தின் அறிவிப்பின்படி அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இது 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையாகும். இத்தொகையை வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் ஒப்பிட்டால்  7900 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

"சாதாரண மக்களை அரசாங்கம் முற்றாக மறந்துவிட்டது. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வொன்று உள்ளது. ஆனால் 71 லட்சம் ஊழியர்கள் தனியார் துறையில் உள்ளனர். அவர்களுக்கு என்ன வழங்கினீர்கள்? விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நன்மை எதுவுமில்லை"  எனவும் ரவி கருணாயக்க கூறினார்.


  Comments - 0

 • Ganesh Tuesday, 22 November 2011 09:03 PM

  நல்ல பேச்சு. பாமர மக்களை பத்தி நீங்களாவது நினைவூட்டீனீர்கள். பொருட்களின் விலையை குறைத்தால் எல்லோருக்கும் நன்மை ஆனால் இந்த ஒரு சாராரை தடவி, மருசாராரை அடிக்கும் திட்டம் ....

  Reply : 0       0

  pasha Tuesday, 22 November 2011 10:10 PM

  இவர்களது ஆட்சியில் என்ன செய்தார்கள் ஐந்து சதம் சம்பள அதிகரிப்பு இல்லை, மாறாக அவர்கள் அரச ஊழியர் வேலை குறைப்பு மற்றும் புதிய நியமனங்கள் வழங்காமை போன்றவற்றை செய்தனர்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .