2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பட்ஜெட் குறித்து பல்கலை ஆசிரியர்கள் அதிருப்தி

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ ஜயசேகர)

பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பளத்தை இரு பகுதியினராலும் ஏற்கப்பட்ட மட்டத்துக்கு 2012 அம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக அதிகரிக்க அரசாங்கம் தவறியுள்ளமையால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அதிருப்தியுற்றுள்ளதுடன் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து கருத்திற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் 2011 ஜுலை 21 ஆம் திகதி அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த  அரசாங்கம் தவறிவிட்டதையிட்டு தாம் அதிருப்தியடைந்துள்ளளதாக இச்சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

'2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 20 சதவீத அடிப்படைச் சம்பள அதிகரிப்பு எமக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 5 சதவீத அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டங்களில் அதிகரித்து ஒரு சிரேஷ்ட  பேராசிரியரின் திரட்டிய சம்பளத்தை மாதத்துக்கு 168,000 ரூபாவாக உயர்த்துவதாக ஒப்பந்தத்தல் ஏற்கப்பட்டிருந்தது.

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட அதிகரிப்பு அடிப்படைச் சம்பளத்துடன் சேருமா அல்லது மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படுமா என்பது தெளிவாக இல்லை?' என டாக்டர் தேவசிறி கூறினார்.

தமது சம்பள கோரிக்கையை வெல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வியாழக்கிழம நடத்தவுள்ள ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது அறிவிக்கப்படுமெனவும் டாக்டர் தேவசிறி கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .