2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஐக்கிய அரபு ராஜ்யத்தின் வர்த்தக வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 23 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

ஐக்கிய அரபு ராஜ்யத்தின் வர்த்தக வெளிவிவகார அமைச்சர் ஷேக் லுப்னா பின்த் கலீத் பின் சுல்தான் அல் காசிமி இன்று இலங்கை வருகின்றார். கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்த அழைப்பின் பேரில் இலங்கைவரும் ஷேக் லுப்னா 3 தினங்கள் தங்கியிருப்பார்.

ஜனாதிபதி மற்றும் பெருளாதார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரதி நிதிகளை சந்திக்கும் ஷேக் லுப்னாஇ இலங்கை வர்த்தக பிரதிநிதிகளின் கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய அரபு ராஜ்யத்தின் ஆட்சியில் 2004ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சராக பதவி வகித்த லுப்னா வெளிநாட்டு விஜய குழுக்களுக்கு தலைமை தாங்கி சென்றுள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு ராஜ்யத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கையும்இஜக்கிய அரபு ராஜ்யமும் சர்வதேச சந்தைகளுக்குள் பிரவேசிப்பது குறித்து ஷேக் லுப்னாவுடன் கலந்துரையாடினார். ஐக்கிய அரபு ராஜ்யத்தின் முதல் பெண் அமைச்சர் ஷேக் லுப்னா என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .