2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பயிற்சி நிலையம்

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரபுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக முதன் முறையாக பயிற்சி நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மருதானை பிரதேசத்தில் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டிடத் தொகுதியிலே இப்பயிற்சி நிலையம் நிறுவப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இந்த பயிற்சி கல்லூரி நிறுவப்படுவதன் மூலம் பல்லாயிரம் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள் நன்மையடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினாலேயே இந்த முன்மொழிவு சமய விவகார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் 226 அரபு கல்லூரிகள்  பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சுமார் 100 அரபு கல்லூரிகள் பதிவு செய்யப்படாது இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • nawas Thursday, 24 November 2011 01:09 AM

  நல்ல யோசனை தான். ஆனால் எந்த பாடத்திட்டம்?

  Reply : 0       0

  Rizvi Mohammed Thursday, 24 November 2011 03:53 AM

  என்ன பாடத்திட்டம் என்பதை விடுங்க ஐயா. முதல்ல அவங்களா ஏதாவது செய்ய விடுங்க. பிறகு அத பற்றி யோசிப்போம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .