2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சனி, ஞாயிறு தினங்களில் கொழும்பு, வத்தளை பிரதேசங்களில் வாக்காளர் பதிவு நடமாடும் சேவை

A.P.Mathan   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாக்காளர் பதிவு தொடர்பிலே நடமாடும் சேவைகள் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (26, 27) கொழும்பு மாநகரிலும் வத்தளை நகரிலும் நடாத்தப்பட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன...

கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களை முன்னிட்டு வாக்காளர் பதிவு நடமாடும் சேவைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பத்தவர்கள், தகுதிவாய்ந்த வயதெல்லையை கடந்தும் இதுவரை ஒருபோதும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்கள் ஆகியோர் இந்த நடமாடும் சேவைகளில் கலந்துகொண்டு விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்யலாம். வெளிநாடுகளிலே தற்காலிகமாக வசிக்கும், கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களின் அங்கத்தவர்களின் பெயர்களையும் பதிவு செய்யலாம். தமது குடும்ப அங்கத்தவர்களின் விபரங்களுடன் குடும்பத் தலைவர்கள் நடமாடும் சேவை நடைபெறும் இடங்களுக்கு வருகை தருவார்களாயின் அவர்களுக்குரிய ஒத்தாசைகளை எமது கட்சி அமைப்பாளர்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

நடமாடும் சேவை நடைபெறும் இடங்களும் அவற்றை நடாத்திவைக்கும் பொறுப்பாளர்களின் விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. இச்சேவையை பயன்படுத்துவதற்கு விரும்புகின்ற பொதுமக்கள் எமது பொறுப்பாளர்களுடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. கொம்பனித்தெரு கியூ வீதியில் 101/70 எனும் இலக்கத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்ற சங்கம் - வே.முரளிதரன் (0724367317)
2. கொட்டாஞ்சேனை மேட்டுத்தெரு இல 61 – 63 இல் அமைந்துள்ள புனித அந்தோனியார் இளைஞர் முன்னேற்றக் காரியாலயம் - லோரன்ஸ் பெர்னான்டோ (0774013818), ஜெனீபர் பெர்னான்டோ (0772071779)
3. வட கொழும்பு இந்து வித்தியாலயம் - எஸ்.மகேஸ்வரன் (0777308260)
4. மத்திய கொழும்பு இந்து வித்தியாலயம் - எஸ்.தளயரட்ணம் (0714106605)
5. வெள்ளவத்தையில் இல.48/3, தர்மராம வீதியில் அமைந்துள்ள காரியாலயம் மற்றும் மரைன் டிரைவ் வீசா பிள்ளையார் கோயில் - எஸ்.குகவரதன் (0777895760), எஸ்.பாஸ்கரா (0772378718)
6. கிருலப்பனை சித்தார்த்தபுர சனசமூக நிலையம் - சுருதி பிரபா (0777274313)
7. வத்தளை - நீர்கொழும்பு வீதி 146/S3 பேர்ள் பார்க் கட்டடத்தின் 2ஆம் மாடியில் அமைந்துள்ள காரியாலயம் - ஜெரோம் விக்னேஸ்வரன் (0777584973)
8. புறக்கோட்டை கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்போரும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றிக்கொண்டிருப்பவர்களும் கொழும்பில் தமது குடும்பங்களுடன் நிரந்தரமாக வசிப்பவர்களாயின் அவர்களும் தம்மை பதிவு செய்துகொள்ளலாம். இது சம்பந்தமாக தொடர்பு கொள்ளவேண்டிய எமது அமைப்பாளர்கள் - நாகலிங்கம் ராஜா (0773810508), எஸ்.கணேசன் (0777354182), எஸ்.மனோகரன் (0777719519), எஸ்.ஜெயபாலன் (0777397446).

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள தகுதிவாய்ந்த வயதெல்லையை அடைந்த அனைவரும் எமது எந்தவொரு நடமாடும் சேவை நிலையத்திற்கும் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடமாடும் சேவைகளில் கலந்துகொள்ள முடியாதவர்கள் இலக்கம் 72, பாங்சால் வீதி கொழும்பு-11 என்ற எமது தலைமைக் காரியாலயத்திலும் (எஸ்.மூக்கையா 0785104802) விண்ணப்பங்களை பெற்று நிரப்பிக் கையளிக்கலாம்.


  Comments - 0

  • pasha Thursday, 24 November 2011 09:03 PM

    வாக்குகளை பதியுங்கள். உங்கள் அரசியல் வியாபரதிற்கு உதவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .