2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நாம் முட்டாளாக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டுள்ளோம்: பல்கலை ஆசிரியர்கள்

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

உயர் கல்விக்கான நிதியொதுக்கீட்டையும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பளத்தையும் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிப்பதாக கூறிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற தவறியமை குறித்து ஜனாதிபதிக்கும், உயல்கல்வி அமைச்சுக்கும் கடிதம் எழுதவுள்ளதாக பல்கலைக்கழக ஆசியர்களின் சங்கம் இன்று கூறியுள்ளது.

'நாம் ஏமாற்றப்பட்டும் முட்டாளாக்கப்பட்டும் உள்ளோம்' கல்வி சமுதாயத்தை இவ்வாறு நடத்துவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பில்லாத செயற்பாடாக உள்ளது' என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நிமல் தேவசிறி கூறினார்.

தமது சங்கத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்தையின்போது எமது அடிப்படை சம்பளத்தை வரவுசெலவுத் திட்டத்தினூடாக 20 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது என தேவசிறி கூறினார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு வீட்டுக்கடன் வசதி வழங்குவதாகவும் வேறு மேலதிக சேவைகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டது என தேவசிறி கூறினார்.
 
'பல்கலைக்கழக சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவருதல், முறையான அங்கீகாரமில்லாத, நன்கு திட்டமிடப்படாத பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களுக்கு வெளியே பயிற்சிகளை வழங்குவது, உயர்மட்ட அரசாங்க ஊழியர்களுடன் தொடர்பான மிக அதிக கட்டணம் அறவிடும் பாதுகாப்பு நிறுவனங்களிடம் பாதுகாப்பு சேவையை பெற நிர்ப்பந்திப்பது போன்ற விடயங்களில் மாற்றம் கொண்டுவருவது பற்றியும் நாம் கேட்டிருந்தோம்' என தேவசிறி கூறினார்.

அரசாங்கம் அறிவு அடிப்படையிலான பொருளாதாரம் பற்றி பேசுகின்றது. ஆனால் அதற்கேற்ப எதுவும் நடப்பதாக தெரியவில்லை என  பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் உப தலைவர் டாக்டர் ஆனந்த ஜயவிக்கிரம கூறினார்.


  Comments - 0

  • Eelan Friday, 25 November 2011 12:22 PM

    the education society doesn't only contain university teachers. please think broader. Salary should be increased not only for university teachers but also school teachers. When comparing worldwide, the teachers in SL only receives very less amount of salary. So please think broader.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .