Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருடத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை விமானம் மூலம் வருவோரைப்போன்று நடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது
இதற்கமைய படகுகள் மூலம் வந்து அடைக்கலம் கோருவோர் அகதிகள் மீள்பார்வை மன்றத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். முன்பு விமானம் மூலம் வந்து அடைக்கலம் கோருவோருக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே படகு மூலம் வந்த 27 புகலிடம் கோருவோர் 'பிறிட்ஜிங் விஸா' வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனரென குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார்.
முன்னர் படகு மூலம் வருவோர் கப்பலிலேயே தடுத்துவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. 'பிறிட்ஜிங் விஸா' கப்பல் மூலம் வந்தவர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல்த் தடவையாகும். இந்த படகில் வந்தோர் சகலரும் தனியாகவே வந்திருந்தனர். இவர்களில் பெரும்பான்மையினர் இலங்கையர் அல்லது ஆப்கான் நாட்டவராக இருந்தனர்.
புகலிடம் கோரி வருவோரில் சமூகத்துக்கு ஆபத்தானவர்களாக கணிக்கப்படுகின்றவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்படுவரென அமைச்சர் கிறிஸ் போவின் கூறினார். இதுவரை படகு மூலம் வந்தவர்கள் வித்தியாசமான விதிகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
58 minute ago
2 hours ago