2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானின் யுத்தக் கப்பல் இலங்கை வருகிறது

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான சைப் (SAIF) என்னும் யுத்தக் கப்பல் இலங்கைக்கான நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பாகிஸ்தான் கடற்படையின் முன்னணி பாதுகாப்பு அரணாக பயன்படும் குறித்த கப்பல் நாளை 26ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இக்கப்பலானது எதிர்வரும் 29ஆம் திகதிவரை இலங்கையில் தரித்திருக்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு கடற்படை வீரர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதுடன் யுத்த தந்திரங்கள் பற்றியும் கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் தயாரிப்பில் உருவாகிய சைப் கப்பலை கடந்தவருடம் பாகிஸ்தான் கடற்படை கொள்வனவு செய்திருந்தது. இக்கப்பலில் பல்வேறுபட்ட நவீன யுத்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தினை முடித்துக்கொண்டு 'சைப்' யுத்தக்கப்பல் மாலைதீவுக்கும் மலேசியாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .