2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பொதுப்போக்குவரத்து சேவைகளில் பாலியல் தொந்தரவுகள்

Super User   / 2011 நவம்பர் 27 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

பொதுப்போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் 15-45 வயதுக்குட்பட்ட பெண்களில் 70 சதவீதமானோர் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுவதாக சட்ட உதவி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பொதுப்போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நிறுத்தப்படுவதை இலக்காகக் கொண்டு கொழும்பு பஸ்தியன் மாவத்தையில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியொன்றில் உரையாற்றுகையில் சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர்  எஸ்.எஸ். விஜேரட்னர் இவ்வாறு கூறினார்.

'தற்போதுள்ள சட்டங்களின்படி இக்குற்றவாளிகள் ஐந்து வருடகாலம் வரையான சிறைத்தண்டனைகளுக்கு ஆளாகலாம். ஆனால் நடைமுறை சிக்கல்கள் காரணமாக இவர்களில் எவரும் ஐந்துவருட கால சிறைவாசம் அனுபவிக்கவில்லை என அவர் கூறினார்.

இவ்விடயம் நாட்டின் மதிப்புக்கு பங்கம் விளைவிக்கிறது என்பதால் அனைத்து இலங்கையர்களும் இது குறித்து கவனம்  தீவிரமாக செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் பஸ் நடத்துநர், சாரதியிடமோ அல்லது பொலிஸாரிடமோ முறையிடத் தயங்குவதாகவும் அவர் கூறினார்.

'இவ்வாறான நடத்தைகளில் ஈடுபடும் ஆண் பயணிகள் வெட்கப்பட வேண்டும்.  பஸ் சாரதிகள், நடத்துநர்கள் மாத்திரம் இதை தடுக்க முடியாது. தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்படும் என்பதால் குற்றமிழைப்போருக்கு எதிராக சாட்சிகூற பஸ் சாரதிகளும் நடத்துநர்களும் தயங்குகின்றனர்' எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இருவார கால விழிப்புணர்வு செயற்திட்டமொன்றை வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து சட்ட உதவி ஆணைக்கு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்தாகவும் விஜேரட்ன கூறினார்.
 


  Comments - 0

 • neethan Monday, 28 November 2011 04:30 PM

  இவ் விடயத்தில் ஆண்களை மட்டும் முற்று முழுதாக குற்றம் கூற முடியாது, என்றாலும் பெண்களும் சன நெரிசல் பஸ் மூலம் பயணம் செய்வதை தவிர்ப்பதும் ,பெண்களுக்கென தனியான பஸ் சேவைகளை நடாத்துவதும் அவர்கள் தொந்தரவுக்கு ஆளாவதை குறைக்கும்.

  Reply : 0       0

  Pottuvilan Monday, 28 November 2011 06:32 PM

  நல்ல நடவடிக்கை தொடருங்கள்

  Reply : 0       0

  pasha Monday, 28 November 2011 07:24 PM

  neethan, சன நெரிசல் பஸ்களில் மட்டுமல்ல நீண்ட தூர பயணிகள் பஸ்சிலும் இவ்வாறான செயல்கள் நடப்பதாக கூறப்படுகின்றது.

  Reply : 0       0

  RAMKUMAR Monday, 28 November 2011 08:09 PM

  ஆண்களை குற்றம் சொல்ல முடியாது. பெண்கள் உடுக்கும் உடுப்பாலும் அவர்களின் நடத்தையயாலும் இப்படி நடக்கிறது.

  Reply : 0       0

  FATHIMA Tuesday, 29 November 2011 03:18 PM

  பஸ்சுக்குள்ளே மினி போலீஸ் ஸ்டேஷன் போடுங்க ...அப்படியே கோர்ட் ஜெயிலும் வச்சா ரொம்ப வசதி .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X