2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

காணாமல் போன யாழ். பல்கலைக்கழக மாணவர் வீடு திரும்பினார்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 29 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, கிரிசன்)

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை இரண்டாம் வருட மாணவன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளதாக சாவச்சேரி பொலிஸ் நிலையத்தில் அம்மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த மாணவன் எங்கு சென்றாரென்ற விபரம் எதுவும் சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவிக்கப்படவில்லையென  சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும் குறித்த மாணவனிடம் தாம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை இரண்டாம் வருட மாணவனான வே.லத்திஸ் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திலும் அம்மாணவனின் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .