2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பழையில் இளைஞனுக்கு மலேரியா காய்ச்சல்

Freelancer   / 2025 ஜூலை 05 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் - தெல்லிப்பழையில் 24 வயதுடைய இளைஞன் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த மாதம் 30ஆம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மலேரியாக் காய்ச்சல் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையைச் சேர்ந்த குறித்த இளைஞன் 6 மாதங்களாக நைஜீரியா கப்பல் ஒன்றில் வேலை செய்துள்ள நிலையில் கடந்த 28 ஆம் திகதி அன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .