Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 30 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவில் கொலை செய்து புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது ரியாட் பொலிஸாரின் விசாரணைக்கு உதவுமென்று நம்பப்படுவதாக அரேபிய செய்திகளை மேற்கோள் காட்டி இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சித்திர ரணசிங்க (வயது 44) என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் சடலம் மற்றுமொரு இலங்கைப் பெண்ணுக்கு சொந்தமான வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ரியாட்டிலுள்ள வீட்டு வளாகத்திலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றும் குறித்த வீட்டிற்குச் சொந்தமான பெண்ணும் உணவு விடுதியொன்றில் சமையல்க்காரராக பணியாற்றும் அவரது கணவரும் பொலிஸாரால்; கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணும் சந்தே நபர்களும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் ஒரேயிடத்தில் பணியாற்றி வந்தவர்களெனவும்; தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்; பெண்ணின் கணவரும் மகனும் மதுபானம் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் தற்போது சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கருத்துக் கூற மறுத்துள்ள தூதரக அதிகாரிகள், இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இப்பெண்ணின் இலங்கையிலுள்ள மற்றுமொரு மகன், மரணச்சடங்குகளை மேற்கொள்வதற்காக சடலத்தை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு தூதரகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். (Arab News)
31 minute ago
2 hours ago
12 Sep 2025
mohamed Wednesday, 30 November 2011 06:55 PM
நம்ம நாட்டு கலாசாரம் அங்கும் kodi கட்டி பறக்கின்றது போல.
Reply : 0 0
Pottuvilan Wednesday, 30 November 2011 07:32 PM
என்ன கொடுமைடா இது, எல்லாம் பணத்தின் மீது கொண்ட ஆசை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
12 Sep 2025