2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று கைவிடப்படலாம்: எஸ்.பி

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, யொகான் பெரேரா)

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று வியாழக்கிழமை கைவிடப்படலாம் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வெளியீட்டார்.

இந்த தீர்மானத்தை அறிவிப்பிதற்காக உயர் கல்வி அமைச்சும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்களின் சம்மேளனமும் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாடொன்றை உயர் கல்வி அமைச்சில் நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, தொழில் அமைச்சு மற்றும் திறைசேரி அதிகாரிகள் பல சுற்று பேச்சுக்களை மேற்கொண்டனர் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்களின் சம்மேளனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் பல்கலைக்கழக மட்;டத்திலுள்ள உறுப்பினர்களுட்ன நேற்று புதன்கிழமை கலந்துரையாடியுள்ளனர். இதன் பின்னரே கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் தீர்மானம் அறிவிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .