2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வரவு – செலவு திட்டத்தை மதிப்பிட கால அவகாசம் தேவை: பல்கலை சம்மேளனம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான செலவீனத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீதமாக உயர்த்துவதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கௌரவத்தை நிலைநிறுத்துவதாகவும் அரசாங்கம் கூறியிருந்த போதும் இந்த வாக்குறுதிகளை எவ்வாறு, என்ன அடிப்படையில் நிறைவேற்றப்போகின்றது என்பது விளங்கவில்லை என்பதுடன் முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கு கால அவகாசம் தேவை என அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கூறியது.

கல்வித் துறைக்கு 306 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீதம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வரவு – செலவுத் திட்ட உரையின் போது கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர்களின் கௌரவம் நிலைநிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த வரவு – செலவுத் திட்ட அறிவிப்பை மதிப்பிட கால அவகாசம் தேவை என அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தொடங்கி ஐந்து வருட திட்டத்தினூடாக சம்பளங்களை அதிகரிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை இதை உறுதி செய்யும் என நாம் நம்பிக்கையோடு இருந்தோம் என அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X