2025 ஜூலை 09, புதன்கிழமை

நீதி முறைமையை மாற்ற அரசு முயற்சி: சிரேஸ்ட சட்டத்தரணிகள் குழு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(லக்மால் சூரியகொட)


பிரதம நீதியரசர் டாக்டர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக குற்றப்பிரேரணையொன்றை கொண்டுவரும் அரசாங்கத்தின் முயற்சியை சிரேஸ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இன்று கண்டித்துள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தின் முன் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் சிரேஸ்ட சட்டவரைஞர்களின் அரங்கம், பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 14 குற்றச்சாட்டுக்களினதும் உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியது.

பிரதம நீதியரசருக்கு எதிரான நிதி ஒழுங்கீன குற்றச்சாட்டுக்கள் முதலில் ஒரு சுதந்திரமான நீதிமன்றில் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டுமென ஜனாதிபதி சட்டவுரைஞர் ஸ்ரீநாத் கூறினார்.

தற்போதைய நீதி முறைமையை மாற்றுவதற்காகவே அரசாங்கம், பிரதம நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. நீதியமைப்பு அரசாங்கத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கவில்லை. இதனால் தான் இந்த குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டன.

பிரதம நீதியரசர் தனது தங்கையின் பணத்தைக்கொண்டு சொத்தொன்றைக் கொள்வனவு செய்தார். இதற்கான அற்றோனி தத்துவமும் வழங்கப்பட்டிருந்தது. எனவே, இந்த பணத்தைப் பற்றிய பிரச்சினைக்கும் பிரதம நீதியரசருக்கும் தொடர்பில்லை' என அவர் கூறினார்.

நீதிமன்ற கட்டளையின்றி பிரதம நீதியரசரின் வங்கிக் கணக்கு விபரங்களை அரசாங்கம் எப்படி பெற்றது. இந்தவகையில் அரசாங்கம் இந்த நாட்டின் சட்டத்தை மீறியுள்ளது என ஜனாதிபதி சட்டவுரைஞர் ஸ்ரீநாத் குறிப்பிட்டார்.

அரசாங்கமானது பிரசார பொறிமுறையின் மூலம் பிரதம நீதியரசரின் நற்பெயரை களங்கப்படுத்த முயல்கின்றது. ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட முன் அவர் நிரபராதி என கருதப்பட வேண்டும் என்பது சட்டம். இந்த உரிமை பிரதம நீதியரசருக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
 
இதேவேளை, இன்று பீ.ஏ.எஸ்.எல். கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறவுள்ள விசேட பொதுக் கூட்டத்தில் நாட்டின் சகல சட்டவுரைஞர்களையும் பங்குகொள்ளும்படி வழங்குரைஞர் குணரத் வன்னிநாயக்க தெரிவித்தார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .