2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

இலங்கை நிலைமை எப்போதும் குழம்பலாம்: நவிபிள்ளை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து புகலிடம் கோரிச் செல்வோரை உடனடியாக திருப்பி அனுப்புவதில் அவுஸ்திரேலியா காட்டும் புதிய தீவிரத்தையிட்டு அதிர்ச்சி தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, 2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதும் அங்கு திடீரென பிரச்சினைகள் வெடிக்கலாம் என கூறியுள்ளார்.

பாலி ஜனநாயக உச்சிமாநாட்டில் பிரான்ஸ் முதலமைச்சர் ஜூலியா ஜிலாட்டும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, புகலிடம் கோருவோர் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் காலவரையறையின்றி வாடலாம் என பலர் அச்சம் தெரிவித்ததாக கூறிய அவர், முக்கியமாக சிறுவர்களின் நிலைமையையிட்டு கவலை வெளியிட்டுள்ளார்.

புகலிடம் தேடி வந்தவர்களுக்கும் தரமான உடல், உள ஆரோக்கியத்துடன் கூடிய வாழ்வுக்கு உரிமையுண்டு. அவுஸ்திரேலியாவுக்கு வெளியே தடுத்து வைத்தல் சில சமயம் இந்த உரிமையை மறுப்பதாகும் என நவிபிள்ளை கூறியுள்ளார்.

புகலிடம் கோரும் தகுதியில்லாதவர்கள் எனக் கருதப்படும் இலங்கையர்களை கிறிஸ்மஸ் தீவிலிருந்தும் கொக்கோஸ் தீவிலிருந்தும் குடிவரவு திணைக்களம் தாயகம் அனுப்பியுள்ளது. ஆனால், இலங்கையில் 2009இல் யுத்தம் முடிந்துவிட்ட போதும் பிரச்சினைகள் திடீரென வெடிக்கலாம் என நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

மக்களை கடத்துவோரை கட்டுப்படுத்துதல் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும் அரசாங்கத்தின் மனித உரிமை கடப்பாடுகளுக்கு ஏற்ப அடைக்கலம் கோருவோருக்கான பலமான சட்ட பாதுகாப்புகளும் சேர்ந்து வர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0

  • Sumathy M Friday, 09 November 2012 02:16 PM

    ஹலோ அக்கா ,இலங்கையில மட்டுமில்லை எங்கேயும் நிலைமை மாறலாம். லிபியாவிலும் மாறலாம், ஈராக்கிலும் மாறலாம், எகிப்திலும் மாறலாம். ஏன்,அமெரிக்க, இங்கிலாந்திலும் மாறலாம். நீங்கள் ஆற்ற tune இற்கு ஆடுரீங்கள் எண்டது தெரியும். முதல்ல அப்பாவி தமிழரிண்ட அபிவிருத்திக்கு ஏதாச்சும் செய்யுங்கோ...
    சுமதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .