2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வெலிக்கடை சுற்றிவளைப்பு; அதிரடிப்படை ஆணையாளரும் காயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் பாதுகாப்பு தரப்பினருக்கும் கைதிகளுக்கும் இடையிலான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் விசேட அதிரடிப்படையின் ஆணையாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சி.ரணவனவும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைக்குள் ஒரு பகுதி கைதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதனையடுத்மு வெலிக்கடை பிரதேசத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிறைச்சாலை முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிறைச்சாலைக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கு அதிரடிப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் மேலும் பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .