2021 ஜனவரி 20, புதன்கிழமை

வெலிக்கடை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்; கைதிகள் சரண்; இடையிடையே துப்பாக்கிச்சூடு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பித்த இந்த கலவரம் இரவு 9.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, கலவரத்துக்கு காரணமாகிவிருந்த சிறைக்கைதிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சிறைச்சாலைக்குள்ளிருந்து அடிக்கடி துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், சிறைச்சாலைக்குள் இராணுவ வாகனங்களும் அம்பியுலன்ஸ் வண்டிகளுக்கு சென்றுள்ள நிலையில், காயமடைந்த பலர் அவ்வாகனங்களுடாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றன.

சம்பவத்தின் போது 13பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த சுமார் 40 பேர் இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

கலவரத்தின் போது காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தளபதிக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .