2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இராணுவ டிரக் வண்டி விபத்து; படை வீரர் பலி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ டிரக் வண்டியொன்று அஹுங்கல்ல பகுதியிலுள்ள வீடொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படை வீரரொருவர்  பலியானதுடன், நான்கு படை வீரர்கள்  காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்புறுப்பிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவ டிரக் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளானது. டிரக் வண்டியின் சாரதி தூக்கத்திலிருந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட நேர்ந்ததாகவும் பொலிஸார் நம்புகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .