2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஜே.வி.பி.யினர் தாக்கியதாக முறைப்பாடு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாரூக் தாஜுதீன்)

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உறுப்பினர்கள் தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாக முற்போக்கு சோஷலிச கட்சியின் அங்கத்தவர் ஒருவர் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக கருவாத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதவானிடம் கூறினர்.

ஹென்றி பெட்ரிஸ் பார்க்கில் நடைபெறவுள்ள கார்த்திகை வீரர் தின கூட்டத்தை அறிவிக்கும் சுவரொட்டிகளை தானும் தனது தோழர் ஒருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று ஒட்டிக்கொண்டிருந்த போது ஜே.வி.பி உறுப்பினர்கள் தாம் தாக்கப்பட்டதாக ஹெந்த ஆரச்சிகே வீரசிங்க என்பவர் கருவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் ஜே.வி.பி உறுப்பினரான சுமித் சத்தியப்பெரும என்பவரே தம்மை தாக்கியதாக இவர் கூறியுள்ளார். தமது விசாரணை முடிவடைந்ததும் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதாக பொலிஸார் நீதவானிடம் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .