2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'ஐ.நா பணியாளர்களை இலங்கை மிரட்டவில்லை'

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டியான் சில்வா)

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது இலங்கை, ஐ.நா மனிதாபிமானப் பணியாளர்களை மிரட்டியதென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையிலிருந்து கசிந்த தகவல்களில் காணப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் மனித உரிமைத் தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

'அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர்களை எப்படி மிரட்ட முடியும்? அவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்' என்று அவர் கூறினார்.

இலங்கைப் படைகள் மே 2009இல் தமிழ் கிளர்ச்சியாளர்களை நீண்ட, கொடிய யுத்தத்தின் இறுதியின் போது முற்றுமுழுதாக தோற்கடித்தனர்.

ஐ.நா மதிப்பீடுகளின்படி இந்த மோதல் 100,000 உயிர்களைக் காவுகொண்டது. இரு தரப்பினரும் யுத்தக்குற்றம் இழைத்தவர்களென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை நிகழ்வுகள் ஐ.நா.வின் பாரிய தோல்வியாகும் என அறிக்கை வரைவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பளித்தல், மனிதாபிமான பொறுப்புகள் என்பவற்றை பூர்த்தி செய்வதில் இந்த உலக அமைப்பு கூடுதல் நியமங்களை எட்ட வேண்டும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கொழும்பிலிருந்த ஐ.நா சிரேஷ்ட அதிகாரிகள் மீதும் குறைகண்டுள்ளது. சிவிலியன்கள் கொல்லப்படுவதை தடுப்பது தமது பொறுப்பு என்பதை இந்த அதிகாரிகள் தெரியாது இருந்துள்ளனர் என இந்த அறிக்கை விமர்சித்துள்ளது.

ஐ.நா தலைமையகத்திலிருந்த திணைக்கள தலைவர்கள், அவர்களை அவ்வாறு செய்யக்கூடாது என அறிவுறுத்தவில்லை என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஷெல் வீச்சினால் பெருமளவான சிவிலியன்கள் உயிரிழந்தனர் என்பதை வெளிப்படுத்த ஐ.நா தவறிவிட்டதென இந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .