2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஹெஜிங் தீர்ப்பு அரசுக்கு எதிரானது: சி.பி.சி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொச் வங்கிக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டுமென்ற நடுவர் தீர்ப்பு, இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதேயன்றி அரசாங்க நிறுவனமான இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எதிரானது அல்ல என அந்த கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

'அது அரசாங்கத்துக்கு எதிரானது. எமக்கு எதிரானது அல்ல' என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா கூறியுள்ளார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மத்தியஸ்த நிறுவனத்தின் தீர்ப்பின்படி டொச் வங்கிக்கு எதிராக 60 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெஜிங் வழக்கில் அரசாங்க நிறுவனமான பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தோல்வி கண்டதென நவம்பர் 2இல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

எந்தவொரு ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எதிரான நடுவர் தீர்ப்புக் கொடுப்பனவு எதையும் டொச் வங்கி பெறவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவிப்பதாக சுசந்த சில்வா தனியொரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்...

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு:அரசாங்கம்


டொச் வங்கிக்கு எதிரான ஹெஜிங் வழக்கில் 60 மில்லியன் டொலரை இழந்தது சி.பி.சி...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X