2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மைத்துனரின் பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்பிக்கவும்: நீதிமன்றம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரீ.பாரூக் தாஜுதீன்)

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை விக்னேஸ்வரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான்இ புறக்கோட்டை பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கபுலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை விக்னேஸ்வரனை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை சந்தேக நபரின் தொலைபேசி உரையாடல்களை ஆராய்வதற்கு கால அவகாசம் தேவையென பொலிஸார் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .