2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக நவவி மீண்டும் நியமனம்

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக அஷ்ஷெய்க் வை.எ ல்.எம். நவவி (நளீமி) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய இவர் கடந்த நவம்பர் 8ஆம் திகதி வியாழக்கிழமை முதல் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சிற்கு திடீரென இடமாற்றப்பட்டிருந்தார்.

ஹஜ் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் தலையீட்டை அடுத்து நவவியின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையில் இன்று புதன்கிழமை மாலை 2013ஆம் ஆண்டுக்கான ஹஜ் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் பணிப்பாளர் நவவியும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .