2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் பரிசோதகருக்கு பிடியாணை

Kanagaraj   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்யுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகரான எம்.பி சுதேச விஜேயசிங்கவை கைது செய்யுமாறே ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி வை.ஆர். நெலும்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் எம்.பி சுதேச விஜேயசிங்க பிரதான சாட்சியாளராவார்.

இது தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில்  ஆஜராகவில்லை அதனையடுத்தே மேற்படி வழக்கை டிசம்பர் மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .