2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

பாம்பை பாடுபடுத்தியதாக குற்றப்பத்திரம் தாக்கல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

பாம்பை நினைத்தப்படி சாப்பிடவிடாமல் அதற்கு இடையூறு விளைவித்து அதன் வளர்சிக்கு குந்தகம் விளைவித்ததாக விலங்கு வதை தடைச்சட்டத்தின் கீழ் நிரோஷா விமலரத்ன திலானிக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் நேற்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  

கொள்ளுப்பிட்டியிலுள்ள இரவு விடுதியொன்றில் வெள்ளைநிற நாகப்பாம்புடன் நடனமாடிய 25 வயதான நிரோஷா விமலரத்ன திலானி என்ற யுவதிக்கு அந்த பாம்பைக் கொடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நவம்பர் 15ஆம் திகதி தீர்ப்பு வழங்குவதற்கு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி  தீர்மானித்தது.

இதன்படி மேற்படி வழக்கு விசாரணை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் கனிஷ்க விஜேரத்ன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விலங்கு வதை தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக பொலிஸார்   குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

மேற்படி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு  விசாரிக்கப்பட்ட போது கொள்ளுப்பிட்டி பொலிஸார்இ பாம்புக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில், குற்றச்சாட்டுக்கள் ஏதும் இருப்பின் அதனை முன்வைக்குமாறு நீதவான் கடந்த விசாரணையின் போது  அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நிரோஷா விமலரத்ன திலானி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி ஹர்ஷ குலரத்னஇ பாம்பு விஷ ஜந்துக்கள் வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதனை வளர்ப்பதற்கு தடை இல்லை என்பதுடன் அந்தப் பாம்பின் மீது தனது தரப்பைச் சேர்ந்தவர் அன்பு செலுத்துகிறார். ஆதலால் அந்தப் பாம்பை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த பொலிஸார், செல்லப்பிராணியாக நாய்இ பூனைகளை வளர்ப்பதைப் போன்று  பாம்பை மேற்படி பெண் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றார் என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு  அன்று கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய விசாரணையின் போது நஜா நஜா என்ற விஞ்ஞான பெயரை கொண்ட குறித்த பாம்பை சந்தேகநபரான இந்த பெண் தான் நினைத்தப்படி சாப்பிடவிடாமல் தடுத்தார்.

அதன் வளர்சியை குந்தகம் விளைவித்தார், துன்பத்தை விளைவித்தார், பாடுபடுத்தினார் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே  விலங்கு வதை தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

இந்நிலையிலேயே இந்த வழக்கை டிசம்பர் 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்த  கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் கனிஷ்க விஜேரத்ன பாம்பை கொடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அன்றைய தினம் அறிவிப்பதாக தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .